கலெக்டர் முதல் எஸ்.பி வரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 18, 2025

கலெக்டர் முதல் எஸ்.பி வரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்பு


 தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தர்ம செல்வன் என்பவரை திமுக தலைமை புதிதாக நியமித்து உத்தரவிட்ட நிலையில் இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக கூறும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது பற்றி ஆடியோவில் கூறியிருந்ததாவது, மாவட்டத்தில் எந்த அதிகாரிகளும் என்னை மீறி செயல்படக்கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களை மாற்ற முடியாது நான் லெட்டர் வைத்தால் மட்டும் தான் மாற்ற முடியும். மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் இல்லை எனில் கதை முடிந்து விடும்.

கேம் விளையாட இங்க இடம் கிடையாது. நான் சொல்வதைக் கேட்கும் நபர்களுக்கு மட்டும்தான் இடம் கொடுக்கப்படுமே தவிர நான் சொல்வதைக் கேட்கவிடில் அவர்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தர்மசெல்வனை தற்போது திமுக நீக்கியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக எம் பி மணியை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment