SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி கைது..... ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் - காயல் அப்பாஸ் கண்டனம் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 6, 2025

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி கைது..... ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் - காயல் அப்பாஸ் கண்டனம்


மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது:-

S D P I கட்சியின் தேசிய தலைவர் எம்.கே பைஸி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக  கூறி அமலாக்கா துறை கைது செய்திருப்பது ஒன்றிய அரசின் சர்வாதிகார செயலாக தான் பார்க்க முடிகிறது. 

ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள NRC - NPR - CAA போன்ற கருப்பு  சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் S D P I கட்சி எழுச்சியான  போராட்டங்களையும்  கடுமையான எதிர்ப்புகளையும் ஜனநாயக ரீதியில் தெரிவித்து உள்ளது.

இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக S D P I கட்சி மீண்டும் இந்தியா முழுவதும்  போராட்டங்களை  முன்னெடுத்து சென்று விட கூடாது என்பதற்க்காக வேண்டி இதனை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டு எம்.கே பைஜியை கைது செய்து இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது?

ஒன்றிய பா ஜ க அரசிற்கு எதிராக ஜனநாயக ரீதியில் யாருயேல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை ஒடுக்க வேண்டும் என்கிற வகையில் அவர்கள் மீது வழக்குகள் மற்றும் கைது செய்வது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து அரகேற்றி வரும் ஒன்றிய அரசின் சர்வாதிகார செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வண்மையாக கண்டிக்கிறது.

எனவே - கைது செய்ய பட்ட S D P I கட்சியின் தேசிய தலைவர் எம்.கே பைஸி மீது போட பட்ட வழக்கை ரத்து செய்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment