4 நாட்களில் 1200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ராஜினாமா - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 29, 2025

4 நாட்களில் 1200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ராஜினாமா

 


காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று கூறப்படுவதால் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு சிந்து நதிநீரை இந்தியா நிறுத்திவிட்டது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிலவலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு செல்வதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1200 ராணுவ வீரர்கள் ராஜினாமா செய்துவிட்டு ராணுவத்திலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளி வருகிறது. 

இதனை இன்னும் பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ராணுவம் தொடர்பாக உள்துறை மந்திரிக்கு எழுதிய கடிதங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அந்த நாட்டில் உள்ள உட்பூசல்கள் மற்றும் நிதிதட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இராணுவ வீரர்கள் ராஜினாமா செய்வதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment