• Breaking News

    திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ முருகன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


    நாகை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவிலில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்கும் சித்ரா பௌர்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் நாகை மாவட்டம்  எட்டுக்குடியில் அமைந்துள்ள  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்  சித்ரா பௌர்ணமி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருவிழா மே 3 ஆம்‌ தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே.13 வரை மூன்றாவது 11 நாட்கள் நடைபெறு உள்ளது.

    உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 60 மணி நேரம் இடைவிடாது பாலபிஷேகம் நடக்கும் சிறப்புக்குரிய சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகத்தில்  ஏறக்குறைய சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள். 

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே. 11ஆம் தேதியும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் மே 12 ஆம்  தேதியும்  நடக்க உள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக  11 துறைகள் உடனான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    வட்டாட்சியர் கிரிஜாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டுக்குடி கோயில் செயல் அலுவலர் கவியரசு, கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை  அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு பணிகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உடனான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது .

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன் 

    No comments