• Breaking News

    நாகை அருகே தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா..... 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்....


    நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா  கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

    தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நடைப்பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  பால் காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைப்பெற்றது. இதில் காப்புக்கட்டி விரதமிருந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து  தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். 

    தொடர்ந்து அம்மனுக்கு  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000 த்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து இரவில் அம்மன் வீதி உலா காட்சி நடைப்பெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி 


    No comments