இன்றைய ராசிபலன் 29-04-2025 - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 29, 2025

இன்றைய ராசிபலன் 29-04-2025

 


Todays Tamil Rasi palam

மேஷம் ராசிபலன்

புதிய எண்ணங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் வந்து செல்லும். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் நீண்டநாட்களாகத்தொடர்பில்லாத,அன்புக்குரியவர்களைத்தொடர்பு கொண்டு பேசுங்கள். கடந்த காலத்தைப்பற்றிச்சிந்திக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை எண்ணிப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.உங்களைச்சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சிலர்உங்களுக்குப்பொய்யான நம்பிக்கையை அளிப்பார்கள்.அதைக் கண்டு பயப்படாதீர்கள்.உங்களுக்குத்தேவையானதை மட்டுமே தேர்வு செய்து, அதற்கு ஏற்ப உங்கள்செயல்களைச்செய்யத் தொடங்குங்கள்.

Todays Tamil Rasi palam

ரிஷபம் ராசிபலன்

உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் நேர்த்தியாக உள்ளன. விட்டுவிடமுடியாத ஒரு மோசமான பழக்கத்தைத் விட்டொழிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க, இது ஒரு சிறந்த தருணமாகும். உங்களது வாழ்க்கையில் பிரவேசிக்க, ஒரு அந்நியர் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், அவரின் எல்லா நாடகங்களையும் சமாளிக்க உங்களுக்கு நேரமும், சக்தியும் இருகிறதா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பகல் கனவு காண்பது என்பது பின்னாளில் உங்களது நேரத்தை வீணடித்து விட்டது. இந்த அங்கலாய்ப்பான நிலையை நீங்கள் மாற்றிவிட்டு, உங்களது கனவுகளை அடைய பணி செய்யுங்கள்.

Todays Tamil Rasi palam

மிதுனம் ராசிபலன்

இந்த நாளில் சில முக்கியமான விஷயங்களில் சிறந்த தெளிவு பெற உங்கள் மனதை எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்த உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். இன்று அமைதியாக உட்கார்ந்து உங்களுக்கு பிடித்தமான செயல்களைச் செய்யுங்கள். பின்வாங்குவதற்கு சாத்தியம் இல்லாத ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். உங்களுக்கான எல்லையை நீங்கள் கடந்து விட்டதாக நீங்கள் நினைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்க வெட்கப்பட வேண்டாம்.

Todays Tamil Rasi palam

கடகம் ராசிபலன்

நீங்கள் சமீபத்தில் சோம்பேறித்தனமாக விஷயங்களை செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது பரவாயில்லை. ஏனென்றால், உங்களிடம் ஏதோ மாற்றம் இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. சில நல்லதாகவும் மற்றவை அவ்வளவு நல்ல விஷயங்கள் இல்லாமலும் உள்ளன. இந்த நாள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் தொடங்கலாம். அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுவது அல்லது நண்பர்களிடம் நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.

Todays Tamil Rasi palam

சிம்மம் ராசிபலன்

உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட, உங்களது அன்பைக் காட்டத் தேர்ந்தெடுங்கள். உங்களது கனிவான வார்த்தைகள் அவற்றை செம்மையாக மாற்றும். புறங்கூறுபவர்களின் விமர்சனம் தான் வெற்றியை பத்து மடங்கு இனிமையாக்குகிறது என்பதை நினைவிற்க்கொள்ளுங்கள். இன்று, எதிர்பாராத ஒரு நபர் உங்களுக்கு உதவி செய்ய வருவார். இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்யத் தேர்வு செய்யுங்கள். சில காலமாக உங்களைப் பாதிக்கும் வலிகளையும், வேதனைகளையும் புறக்கணிக்காதீர்கள். இது தொழில்முறை நிபுணதத்துவம் கொண்ட ஒரு நபரால் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

Todays Tamil Rasi palam

கன்னி ராசிபலன்

இன்று, முக்கியமில்லாத விஷயங்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள். ஏனென்றால், உங்களது ஆற்றல் தீர்கமான விஷயங்களுக்கு செலவிடப்பட வேண்டும். இன்று, உங்களது ஆற்றலைத் சிறப்பாகப் பயன்படுத்த தேர்வு செய்யுங்கள். உங்களது விருப்பங்களை ஆராய்ந்து, அதிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறத் தயாராக இருங்கள். அடுத்த சில நாட்களில், இது நிச்சயமாக உங்களுக்கு நன்மை பயக்கும்.

Todays Tamil Rasi palam

துலாம் ராசிபலன்

அதைப் போலவே, சில விசயைங்களைச் சொல்வது மக்களைக் காயப்படுத்துகிறது. சில நேரங்களில், உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் மனசாட்சியுடன் பேசுவதில் எந்த தவறுமில்லை. உங்கள் சுயநலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மற்றவர்களின் உணர்வுகளும் முக்கியம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று, நீங்கள் சொல்லும் விஷயங்கள் உங்களைப் போற்றும் ஒருவரைக் காயப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Todays Tamil Rasi palam

விருச்சிகம் ராசிபலன்

நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த கற்றுக் கொள்வதுடன், நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைத்து, முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பது நல்லது. உங்களைச் சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

Todays Tamil Rasi palam

தனுசு ராசிபலன்

உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். மாறாக, நல்ல விஷயங்களைக் கேட்பவராக இருக்க முயற்சி செய்யுங்கள். தப்பான எண்ணங்கள் ஒதுக்கி வைத்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். பல்வேறு விஷயங்களில் மக்கள் உங்களுக்காக ஆலோசனை பெறுவார்கள். நீங்கள் நன்கு அறிந்த விஷயங்களில் மட்டுமே, உங்கள் கவனத்தைச் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும் நீங்கள் நிறையச் செல்வாக்கைச் செலுத்துகிறீர்கள். செயல்படுத்த வேண்டிய நேர்மறையான மற்றும் மேம்பட்ட விஷயங்களைத் தேர்வு செய்யவும். இது உங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Todays Tamil Rasi palam

மகரம் ராசிபலன்

இன்று நீங்கள் மனதில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைய உத்வேகத்துடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யும் போது, நீங்கள் சந்திக்க வேண்டிய விஷயங்களில் உண்டாகும் சிறிய பின்னடைவுகளைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். உங்கள் கனவுகள் நனவாக உங்கள் பிடிவாதமே உங்களுக்கு உதவுகிறது. உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் உங்களுக்குப் பெரிய வெகுமதியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கை பாதையில் உள்ள கவனச்சிதறல்கள் மற்றும் சோதனைகளை எதிர்ப்பது போராடுவது எளிதல்ல. ஆனாலும், நீங்கள் அதைச் செய்தீர்கள். அதற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ள வேண்டும்.

Todays Tamil Rasi palam

கும்பம் ராசிபலன்

வறுமை உங்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே வேலை செய்யுங்கள். உங்கள் வேலையைச் செய்யும் போது ஏராளமான அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும். அதில், சரியானவற்றைப் பிடிக்க வேண்டும். அது உங்களுக்குச் சாதகமான உந்துதலைத் தரும். யாருடைய ஆடம்பரமான சொற்களிலும் மயங்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் ஒப்புதலைப் பெற நீங்கள் எந்த அற்பத்தனமான விஷயங்களையும் செய்ய வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். முடிவுகள் முழு வடிவம் பெறும் வரை காத்திருங்கள்.

Todays Tamil Rasi palam

மீனம் ராசிபலன்

உங்கள் உள் மனம் புதிகாக ஒன்றைத் தேடுகிறது. இது உங்கள் மனதில் உள்ளதா? இல்லையென்றால், மற்றவரின் மனதில் உள்ளவற்றை சரியான வழியில் தெரிவிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். தவறான புரிதல்களை நீக்கி அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment