நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியை சேர்ந்த உமாபதி என்ற மாற்றுத்திறனாளி மாத உதவி தொகை கிடைக்கவில்லை என்றும், இரண்டு கால்கள் இருந்தும் நடக்க முடியாத சூழலில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனியாக சென்றவர் மனுவை எழுதி ஆட்சியர் அலுவலக வாசலில் என்ன செய்ய தென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொது நல சங்கம் மாநில தலைவர் சமூக சேவகர் என் விஜயராகவன் மற்றும் நிர்வாகிகள் மாற்று திறனாளிக்கு வழிகாட்டும் விதமாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை நேரில் சந்தித்து உமாபதிக்கு ஊன்றுகோல் மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய வண்டி கிடைப்பதற்கு உதவினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து மனு கொடுத்தனர் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர் மேலும் மாற்றுத்திறனாளி உமாபதி குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
அரசு சார்பில் சலுகைகள் விரைவில் கிடைக்க உதவுமாறு விஜயராகவன் கேட்டுக் கொண்டது குறிப்பிடதக்கது. மேலும் சமூக ஆர்வலரான விஜயராகவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாகை: செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment