திருச்சி அரசு கலைக் கல்லூரியில் உலக நிலைப்புத் தன்மை மற்றும் புதுமைக்கான வேதி அறிவியல் சர்வதேச மாநாடு நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

திருச்சி அரசு கலைக் கல்லூரியில் உலக நிலைப்புத் தன்மை மற்றும் புதுமைக்கான வேதி அறிவியல் சர்வதேச மாநாடு நடைபெற்றது


 அரசு கலைக் கல்லூரி, திருச்சி 22 முது அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை, மும்பை வேதியியல் ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து உலக நிலைப்புத் தன்மை மற்றும் புதுமைக்கான வேதி அறிவியல் என்ற தலைப்பில்  ஐந்தாவது சர்வதேச மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது. 

கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சத்யா அவர்களால் விழா இனிதே துவங்கப்பட்டது. விழாத் தலைவர் மற்றும் துறைத் தலைவர்  முனைவர் வி. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சத்யா அவர்கள் விழாவிற்கு தலைமை உரையாற்றினார். விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் தாரி ணி அவர்கள் மாநாடைப் பற்றி விவரித்தார்.

 கல்லூரி முதல்வர் அவர்களால் மாநாடு மலர் வெளியிட ப்பட்டது. மாநாட்டின் சிறப்பு விருந்தினர் மற்றும் கருத்தாளர் முனைவர் ஸ்ரீரஞ்சனி ஆறுமுகம் அவர்கள் முதல் மலரைப் பெற்றுக் கொண்டார். விழாவின் முதல் பகுதியில் அறிவியலில் உருவாகி இருக்கும் மாறுபட்ட வாய்ப்புகள் பற்றி ஜெர்மனியை சேர்ந்த  நிர்வாக இயக்குனர் முனைவர் ஸ்ரீரஞ்சனி ஆறுமுகம் அவர்கள் விரிவாக விளக்கினார். 

விழாவின் இரண்டாம் பகுதியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் வேணுகோபால் அவர்கள் காப்பர் ( II )மற்றும் ருத்தினியம் (II ) அணைவு சேர்மங்கள் புற்றுநோயை  எதிர்த்து எவ்வாறு செயல்படுகின்றன என்று விவரித்தார். விழாவின் மூன்றாம் பகுதியில் திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் வே தியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அறிவழகன் சின்னப்பா அவர்கள் புரதங்களில் எலக்ட்ரான் மாற்றங்கள் குறித்து சிறப்பாக விளக்கினார்.

 விழாவின் நான்காம் பகுதியில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித் தார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் 200க்கும் மேற்பட்ட தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். அதில் மூன்று சிறந்த வாய்மொழி பகிர்வுகளும் மூன்று சிறந்த காட்சி பகிர்களும் தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் உமா மாதேஸ்வரி அவர்களால்  நன்றி தெரிவிக்கப்பட்டது. வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்  சகாய அமுதா விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் நாட்டுப்பண்ணு டன் விழா இனிதே நிறைவு பெற்றது.



No comments:

Post a Comment