ஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் எலத்தூர் மையப்பகுதியாக கொண்டு விளங்குகிறது.
மேலும் சத்தியமங்கலம் தாளவாடி, மைசூர், நம்பியூர் பிரதான சாலையில் தொடர்ந்து வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எலத்தூர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் காலை நேரங்களில் பணிக்குச் செல்லும் பொது மக்களை வெறிநாய்கள் துரத்தி விபத்துக்களை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் உள்ளது.
எலத்தூர் அரசு பள்ளி மற்றும் சத்தியமங்கலம் நம்பியூர் சாலையில் விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வரும் பொழுது தெரு நாய்களின் அச்சத்துடனே ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டுள்ளனர்.வெறிநாய்களின் பிடியிலிருந்து பொதுமக்களையும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதுகாத்துமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி.
0 Comments