பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஈரோடு மேற்கு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் மிசா.தங்கவேல் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பிராஜன்   வரவேற்புரையாற்றினார்.

கல்வி,பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்வளவன் , வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபால்சாமி , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி , கோபி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்,  நம்பியூர் ஒன்றிய செயலாளர் செல்வன்,நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் , தாளவாடி ஒன்றிய பொறுப்பாளர் சிவா , கோபி நகர செயலாளர் மாணிக்கம், நம்பியூர் நகர செயலாளர் மூர்த்தி, புளியம்பட்டி நகர செயலாளர் கிருஷ்ணன்,  அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் ஈஸ்வரன் , பவானிசாகர் பேரூர் செயலாளர் கனகராஜ், பவானிசாகர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் விஜயன் , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சீதாராமன், கோபி நகர துணை செயலாளர் ரேவதி, பவானி நகரம் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், ஈரோடு - திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் , ஈரோடு - திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி , மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி , கோபி சட்டமன்ற தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி ,ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகம் , மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் குரைஷ் பாத்திமா அப்துல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மாவட்ட தலைவர் சமீர் , சத்தியமங்கலம் புரட்சிகர இளைஞர் முன்னணி சக்தி வேல் ,புரட்சிகர இளைஞர் முன்னணி பாலு, SDPI கட்சி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஹபிபுல்லா , சத்தியமங்கலம் நகரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிட வீரன் , திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் துணை நிலை அமைப்புக்களின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சத்தியமங்கலம் நகர செயலாளர் சிவா நன்றியுரையாற்றினார்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .

Post a Comment

0 Comments