ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி வட்டம் , கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆயிக்கவுண்டன் பாளையத்தில் தொடங்கியது. இம்முகாமை நஞ்சை ஊத்துக்குளி கனரா வங்கியின் மேலாளர் சுபாஷ் சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 25 பேர் பங்கேற்றனர். ஆயிக்கவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றி உள்ள பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கணபதி பாளையம் மற்றும் சித்த மருத்துவ மூலிகை பிரிவு மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி கணபதிபாளையம் சுற்றி உள்ள பகுதிகள் சுத்தம் செய்தல் போன்ற உடல் உழைப்பு பணிகள், கண் பரிசோதனை முகாம், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி, பேரிடர் மேலாண்மை, பதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கல்வி கற்பித்தல் போன்ற சமூக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன.
இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் டே. சுகுணா பிளாரன்ஸ், பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம்.வி. சர்மிளா, பள்ளியின் கட்டிட கமிட்டி உறுப்பினர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
0 Comments