திருவள்ளூர் மாவட்டம்,ஆவடி காவல் ஆணையரகத்தின் எல்லையில் அடங்கிய திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜமீலாபாத் அரசினர் உயர்நிலைப்பள்ளி,கூனங்குப்பம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள பள்ளி அருகாமையில் போதை பொருட்கள் விற்பதற்கான தடை உத்தரவு குறித்தும் பள்ளி அருகில் புகையிலை பான் குட்கா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பள்ளிக்கு பிரதான வழியாக இருக்க கூடிய இடங்களில் பெயிண்டால் ஆன வெள்ளை கோடுகள் போடப்படும், பேரிகாட் எனப்படும் தடுப்புகளில் பள்ளி அருகாமையில் புகையிலை பான் குட்கா விற்பனை செய்வதற்கு தடைபட்ட தடை செய்யப்பட்ட பகுதி என எழுதப்பட்டும், பள்ளி சுவரில் போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.
பள்ளி துவங்கும் நேரத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள்,பள்ளி தலைமை ஆசிரியர்யர்கள் இதில் பங்கேற்றனர்.
0 Comments