திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை வேண்டுமென கோரிக்கை அதன் அடிப்படையில் நபார்டு வாங்கிய திட்டத்தின் கீழ் இரண்டு கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் அறிவுறுத்தலின்படி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கேசவன் கிழக்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ் கவுன்சிலர்கள் கருணாகரன், கரீம் , காளிதாஸ் எஸ் எம் சி உறுப்பினர் சுவாமிநாதன் பள்ளி தலைமை ஆசிரியர் லதா உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன் தமாக சேகர் வார்டு செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கழக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.
0 Comments