கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு பள்ளியில் 2005-2007 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..... பள்ளியில் கணினி ஆய்வகத்தை ரூ.1.20 லட்சம் மதிப்பில் புதுப்பித்தனர்.....


கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே.எல். கே.அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் 2005 மற்றும் 2007 மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளியில் உள்ள  கணினி ஆய்வகத்தை புதுப்பித்து தந்தனர்.

அத்துடன் மாணவர்களுக்கு போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை தயார் செய்து பள்ளிக்கு பரிசளித்தனர்.மேலும் கணினி மற்றும் ஏ ஐ தொழில்நுட்பம் குறித்த 110 புத்தகங்களை பள்ளியின் நூலகத்திற்கு பரிசாக வழங்கினார்கள்.அத்துடன் அதே பள்ளியில் படித்து தொழில்நுட்ப துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் முன்னாள் மாணவர்கள் மாதம் ஒரு நாள் தற்போதைய மாணவர்களின் எதிர்கால நலனிற்காக இலவச கணினி தொழில்நுட்ப வகுப்புகளையும், ரோபோடிக்ஸ் வகுப்புகளையும், பணி சார்ந்த வாழ்க்கை முறைகளையும் பயிற்றுவிக்க பள்ளிக்கு உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

விழாவிற்கு முன்னால் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் என 20 வருடத்திற்கு முன்னால்  பணியாற்றிய 38 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு பின்னர் மாணவர்களுக்கு உள்ளே பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் நடனமாடி பின்னர் மதிய உணவு அருந்தி சென்றனர். இந்நிகழ்வை நடத்திய மாணவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments