தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படியை வழங்கக்கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.கடந்த 16ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியது. தற்போது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

 இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதலாக செலவாகும். ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்தத் தொகை வருவதற்கு காலதாமதம் ஆகும் என ஊழியர்கள் கருதி உள்ளனர்.இதனால் அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், செந்தில்முருகன் உள்ளிட்டோர் கொண்ட ஊழியர்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments