புன்செய் புளியம்பட்டி நகர திமுக சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரொக்கம், இனிப்புகள், பட்டாசு பெட்டிகள் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது


ஈரோடு மாவட்டம் ,  புன்செய்  புளியம்பட்டி நகர திமுக சார்பில் நகர செயலாளரும்,  நகர்மன்ற துணை தலைவர்  பி.ஏ.சிதம்பரம்  ஏற்பாட்டிலும்,  அறிவுறுத்தலின்படியும் தீபஒளி திருநாளை முன்னிட்டு புன்செய்  புளியம்பட்டிக்கு உட்பட்ட 20 அங்கன்வாடி பணியாளர்களுக்கு (ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள்) ரொக்கம், இனிப்புகள் மற்றும் பட்டாசு பெட்டிகள் அடங்கிய பரிசு பொருட்களை புன்செய் புளியம்பட்டி நகர திமுக செயற்குழு உறுப்பினர்  சந்தானபாரதி சிதம்பரம்  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 1வது வார்டு திமுக செயலாளர்  நடராஜன் , 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  அ.சிவசண்முகம் , நகர கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்  பி.எஸ்.பூந்தமிழ் , நகர இளைஞரணி அமைப்பாளர்  வே.சதீஷ்குமார் , துணை அமைப்பாளர்  நா.பைசல் ,நகர மாணவரணி அமைப்பாளர்  நா.சபீர் அன்சல் , துணை அமைப்பாளர்  செ.சந்துரு , நகர அயலக அணி துணை அமைப்பாளர்  நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .



Post a Comment

0 Comments