சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.... 8 பேர் கைது - MAKKAL NERAM

Breaking

Monday, April 14, 2025

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.... 8 பேர் கைது

 


சென்னையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ரகசிய தகவலின் பேரில் சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது 1 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேர் அளித்த வாக்குமூலத்தின் படி, மேலும் 3 பேர் கைது கோயம்பேட்டில் சிக்கினர். இவர்கள் 8 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து 1 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களில் சாயல்குடி வனக்காப்பாளர் மகேந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். சிக்கிய போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment