திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திரு திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கொடி கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது அதன் பின்னர் சிவனுடைய படத்தினை பொறிக்கப்பட்ட சிவ வாத்தியங்கள் அனைத்தும் கொடியாக ஏற்றப்பட்டது இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாட்களும் பஞ்ச மூர்த்திகள் திருவிழா ராவணேஸ்வரர் வாகனம் தொட்டி உற்சவம் சிம்ம வாகனம் சூரிய பிரபை பூத வாகனம் நாக வாகனம் சந்திரபிரபை பஞ்ச மூர்த்திகள் வீதி உலா தெப்போசவம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்முக்கிய விழாவான திருத்தேராட்டம் வருகிற 9.ஆம் தேதி நடைபெறுகிறது.
11 ஆம் தேதி தொட்டி உற்சவம் பஞ்சமூர்த்தி வீதி உலா விழாவாக நடைபெறுகிறது. இந்த கொடியேற்று விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக சிறுணியம் பலராமன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment