பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 8, 2025

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

No comments:

Post a Comment