அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என ஓபிஎஸ் பதில் - MAKKAL NERAM

Breaking

Friday, April 11, 2025

அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என ஓபிஎஸ் பதில்

 


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு "ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்" என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

No comments:

Post a Comment