திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் கீரனூர் சோதனை சாவடியில் காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என்று ஒவ்வொரு பேருந்திலும் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தில் இருந்த நபர் ஒருவரின் பையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ் (40 வயது) என்றும், திருவாரூரில் உள்ள ஒரு நபரிடம் இருந்து ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை வாங்கிக் கொண்டு மயிலாடுதுறை சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment