மீனவர்களுக்கு நிவாரண நிதி 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்..... பொன்னேரியில் எடப்பாடி பழனிசாமி புதிய தேர்தல் வாக்குறுதி......



திருவள்ளூர் வடக்கு.மாவட்டம்,செயலாளர் சிறுணியும் பி.பலராமன் தலைமையில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மக்களைக் காப்போம் தமிழத்தை மீட்போம் எழுச்சி.பயணத்தில்.எழுச்சியுரை மேற்கொண்டார். 

அப்போது இபிஎஸ் பேசியதாவது, ‘’இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.



திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது. அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.



மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும்.என்று முடித்தார் இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா. கே எஸ். விஜயகுமார் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக மகளிர்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நினைவு பரிசாக செங்கோல் வழகினார் சிறுணியம்.பி.பலராமன்.



Post a Comment

0 Comments