பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட்.... ஜெயில் கைதிகள் அசத்தல்....
பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இதே போன்று சிறைவாசிகளில் பொது தேர்வு எழுதியவர்களில் 92.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகளில் மொத்தம் 140 பேர் தேர்வு எழுதிய நிலையில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments