சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா மற்றும் வணிகர் சங்க தின விழாவில் பொதுநல அமைப்பு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 7, 2025

சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா மற்றும் வணிகர் சங்க தின விழாவில் பொதுநல அமைப்பு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வணிகர் சங்க தின விழாவில் சத்தி அனைத்து வணிகர் தலைவர் எஸ் . என்.ஜவஹர் தலைமையில், சத்தி அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ் .ஏ.சேவியர், சத்தி அனைத்து வணிகர் சங்க பொருளாளர் ச.கி. நாகராஜ், சத்தி அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் எஸ்.ஏ.ஜாகீர் உசேன், சத்தி அனைத்து வணிகர் சங்க துணை செயலாளர்கள் எஸ்.ராம்குமார், கே.சசிகுமார், எஸ்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் ஸ்ரீ குமரன் மஹால் திருமண மண்டபத்தில் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் செய்த சேவைகளை பாராட்டி, விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ ,  மாணவிகள் மற்றும் உடல் உறுப்பு தானம் பதிவு செய்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு  அழைப்பாளர்களாக சத்தி திமுக நகர செயலாளரும் , சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர் .ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி. முத்தரசு, சத்தியமங்கலம் காவல்துறை காவல் துணை ஆய்வாளர் பரமேஸ்வரன், வணிகவரி துறை அதிகாரி பாலமுருகன், ஆனை கொம்பு ஸ்ரீராம், வெற்றி நர்சிங் ஹோம் ஸ்ரீதர், ஆடிட்டர் அமுதா, எல்ஐசி கந்தசாமி, தீரன் அறக்கட்டளை ஆனந்தகுமார் மற்றும் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின்  உறுப்பினர்கள் சிகரங்கள் கமலகண்ணன் , எம்.ராஜா மாதவன், பாலச்சந்தர்,  பொது நல அமைப்பை சேர்ந்த சத்தி ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் , சத்தி பழக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சத்தி ஜவுளிகடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சத்தி டூவீலர் மெக்கானிக் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சத்தி திருமண மண்டப உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சத்தி மருந்து கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சத்தி நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சத்தி சவரத் தொழில் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர் .



 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.











No comments:

Post a Comment