முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கு, பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
No comments