சென்னையில் திடீர் மழை..... தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று பகலில் இருந்து இருள் மேகம் சூழ்ந்தது. மாலை 3.30 மணியில் இருந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சிங்கப்பூர், மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரூ, சூரத் ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.
வானில் நீண்ட நேரமாக 70 பயணிகளுடன் மதுரை விமானமும், 68 பயணிகளுடன் வட்டமடித்த திருச்சி விமானமும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. 168 பயணிகளுடன் சிங்கப்பூர் விமானம் வானில் வட்டம்டித்து கொண்டு இருந்தது.
அதே போல் சென்னையில் இருந்து புறப்பட இருந்த 11 விமானங்கள் பலத்த காற்று மழை காரணமாக சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னையில் வானிலை சீரானதும் திருப்பி விடப்பட்ட விமானங்களும் வட்டமடித்த விமானங்களும் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments