அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு பேருந்து சேவை துவக்கம்..... அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 31, 2025

அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு பேருந்து சேவை துவக்கம்..... அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூரில் இருந்து தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களான ஊட்டி ராமேஸ்வரம், தாளவாடி , திருச்செந்தூர், வேளாங்கண்ணி  கும்பகோணம்,  உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பேருந்து சேவை வேண்டுமென்ற பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் . எஸ்.சிவசங்கர் ,   தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி  ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தியூர் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து அந்தியூர் , ஈரோடு ,  திருச்சி , புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கி பேருந்து சேவையினை துவக்கி வைத்து விட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை வழங்கி அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றைய தினம் அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பேருந்து சேவையினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர்  சிவகுமார்  ,  வணிக மேலாளர்  ,  தொமுச மண்டல பொதுச்செயலாளர் பாலகுமார்,  ஈரோடு மண்டல துணை தலைவர்  சரவணன் ,  அந்தியூர் தொமுச கிளை செயலாளர் சந்திரன், பொருளாளர்  விஜயகுமார் உட்பட கிளை நிர்வாகிகள்,  அந்தியூர் ஒன்றிய ஓட்டுனர் அணி அமைப்பாளர்  பூரணிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அந்தியூரில் இருந்து நாள்தோறும் அறந்தாங்கி பேருந்தானது காலை 9. 35 மணிக்கு எடுத்து அறந்தாங்கிக்கு ஈரோடு திருச்சி புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கிக்கு மாலை 6:50 மணிக்கு செல்கிறது. அறந்தாங்கியில் இருந்து இரவு 8.50 மணிக்கு எடுத்து மறுநாள் காலை 4:30 மணியளவில் அந்தியூர் வந்து சேருகிறது. அந்தியூரில் இருந்து அறந்தாங்கி ரூ 212 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .

No comments:

Post a Comment