கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்தேன் ஆனால் உண்மையிலேயே காமெடியாக நடிப்பது தான் கஷ்டம்..... நடிகை கஸ்தூரி - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 7, 2025

கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்தேன் ஆனால் உண்மையிலேயே காமெடியாக நடிப்பது தான் கஷ்டம்..... நடிகை கஸ்தூரி

 


தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை கஸ்தூரி. தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.

இதற்கிடையில் சென்னையில் நடந்த பட விழாவில் கஸ்தூரி கலந்துகொண்டார். அவர் பேசும்போது, "கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் உண்மையிலேயே காமெடியாக நடிப்பது தான் கஷ்டம். இதை தற்போது தான் உணர்ந்திருக்கிறேன்.

எனது இத்தனை ஆண்டு பயணத்தில் முதன்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சந்தானத்துக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முதலில் பயந்தேன். பின்னர் கதை கேட்டதும் ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment