மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்த இளைஞர் உயிரிழப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 6, 2025

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்த இளைஞர் உயிரிழப்பு


எடமலைப் பட்டிபுதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அகமது மகன் முகமது ரியாஸ் (21). மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த சில நாட்களாக நோய் குணமாக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முகமது ரியாஸ் அப்பகுதியில் உள்ள பால முருகன் கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரியாஸ், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment