தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சென்னை ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சங்கர் தலைமையில் இரு நாட்கள் தங்கியிருந்து உழவார பணி மேற்கொண்டனர்.
கோவில் அடிவாரம், மலை மீது சென்று சுத்தம் செய்தனர். விளக்குகள், பூஜை பொருட்கள், பலவிதமான பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ததுடன், அடிவாரத்தின் சந்நதிகளை கழுவி சுத்தம் செய்தனர். மேலும் படிக்கட்டுகளையும் சுத்தப்படுத்தினர்.
உழவாரப்பணி மேற்கொண்ட இக்குழுவினரை கோவில்பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment