கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கிய திமுகவினர் - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 4, 2025

கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கிய திமுகவினர்


 நாகை மாவட்டம்,கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில்   துரை செல்வம்  ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கொளப்பாடு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை  திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு  வழங்கினார் ‌. 

இந்நிகழ்வில் திமுக பொதுக்குழு  உறுப்பினர் கோ.சி குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் வீ.ஆர்‌ சுப்பிரமணியன் மற்றும் செந்தில் ஒன்றியதுணைச் செயலாளர்கள் ஜெயந்தி மாசிலாமணி, பாஸ்கரன், கிளைச் செயலாளர் ஜெ. கணபதி, இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். கார்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.குமார், எஸ்.சக்கரவர்த்தி, பி.தேவராஜன், ஜே.அருண் M. ஸ்டாலின்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


முன்னதாக திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய  இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் சார்பில் திருக்குவளை கருணாலயம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.


கீழ்வேளூர் தாலுகா நிருபர் த. கண்ணன் 

No comments:

Post a Comment