ஈரான் - இஸ்ரேல் இடையே வான் தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேற்று முன்தினம் தாக்குதலில் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக, அப்பகுதி வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் இருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதாவது தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், போர் பதற்றம் காரணமாக தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment