பாவூர்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமெண்ட் சாலைப்பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பாவூர்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமெண்ட் சாலைப்பணியினை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்; புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். துணைச்சேர்மன் முத்துகுமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஊராட்சி தலைவர் முத்துமாலையம்மாள் முன்னிலை வகித்தனர். பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வன், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் மேரிமாதவன், ஆசிரியர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments