தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக மூன்றாவது முறையாக மீண்டும் சு.மோகன் தேர்வு
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நாகப்பட்டினம் மாவட்ட மையம் 2025-2028 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் பேரவை கூட்டம் நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கட்டிடத்தில் 21.06.2025 தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலச் செயலாளர் வ.கோவிந்தசாமி தேர்தல் அலுவலராக செயல்பட்டார்.
நடந்த தேர்தலில் புதிய மாவட்ட தலைவராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக பொது சுகாதாரத் துறையை சார்ந்த சு.மோகன் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் செயலாளராக ப.மாதா செல்வன் பொருளாளராக மு. சுத்தானந்த கணேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments