85 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற அதிமுக நிர்வாகி - MAKKAL NERAM

Breaking

Thursday, June 26, 2025

85 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற அதிமுக நிர்வாகி

 


திருவாரூர் மாவட்டம் வெடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த முத்துலட்சுமிக்கு தற்போது 85 வயது ஆகிறது. அதே பகுதியில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகிக்கும் ஆனந்த் பாபு என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டிற்கு அருகே ஆடு கட்டுவது தொடர்பாக முத்துலட்சுமிக்கும் ஆனந்தியின் தாய் மலர் கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மது போதையில் இருந்த ஆனந்த் தனது தாயுடன் இணைந்து முத்துலட்சுமி கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது தாயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment