• Breaking News

    உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் டார்ச்சர்..... கொழுந்தனை தீர்த்து கட்டிய பெண்.....

     


    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது ஜோதிமணி என்பது தெரிய வந்தது. இவர் பூத்தாம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி.

    அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது கோமதி (33), அவரது தந்தை நடராஜன் (48), தாயார் லீலா (45) ஆகியோர் ஜோதி மணியை கொலை செய்துள்ளனர். இதில் ஜோதி மணியின் அண்ணனான முருகன் (48) என்பவரது மனைவிதான் கோமதி.

    இதில் முருகன் கோவையில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் நிலையில் கோமதி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கோமதி தனியாக இருந்ததை பயன்படுத்தி ஜோதிமணி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

    இதுபற்றி அவர் தன் தாய் தந்தையிடம் கூறிய நிலையில் அவர்களும், தங்கை கணவர் ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் ஆரோக்கியசாமி, குட்டி முத்து ஆகியோர் சேர்ந்து அவருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின்னர் கை கால்களை கட்டி கிணற்றில் கொண்டு வீசி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் ஜோதி மணியை கொலை செய்த கோமதி உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments