பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் நம்ம தொகுதியில் நம்ம எம்பி சசிகாத் செந்தில் மக்கள் குறை கேட்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காணியம்பாக்கம், தேவதானம், மெரட்டூர் ,வேளூர், திருவெள்ளவாயல் ,காட்டூர், தத்தமஞ்சி, வஞ்சிவாக்கம், பிரளியம்பாக்கம் வாயலூர் ,நெய்தவாயல் ஆகிய 11 ஊராட்சிகளில் நம்ம தொகுதியில் நம்ம எம்பி என்ற திட்டத்தை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 11 ஊராட்சிகளில் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் அந்தந்த ஊராட்சி பகுதியில் முகாமிட்டு நேரில் சென்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் வீட்டுமனை பட்டா ,100 நாட்கள் பணி ,முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, ரேஷன் கடை ,கழிப்பிட கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்,சாலைஉள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை,1555 மனுக்களாக பெற்றுக் கொண்டு நூறு சதவீதம் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் , மேலும் துறை சார்ந்த மனுக்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என பொதுமக்களிடம் கூறி உறுதி அளித்தார்.
மதிமுக நிர்வாகி வைகோ தாசன் சாலை வேண்டி மனு கொடுத்தார்.எம்பி, எம்எல்ஏ உடன் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம் ,சம்பத் ஊடகப்பிரிவு தலைவர் முகமது தாரிக், பிரபு ,வக்கீல் பிரபாகரன், சம்சுதீன் ,அல்தாப், நந்தினி செந்தில்குமார் ,அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவேற்காடு ஜெயசீலன் ,வல்லூர் நந்தா ,திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஜெகதீசன், பாண்டுரங்கன், தேசராணி தேசப்பன் ,மோகன் ரெட்டி ,நேதாஜி , ராஜேஷ் ,மாரிமுத்து, லட்சுமி ,ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவதானம் லட்சுமி, காட்டூர் செல்வ ராமன் ,நெய்த வாயில் பாலன், முருகன், தெய்வசிகாமணி ,ஆணைழகன், கிராம நிர்வாக அலுவலர் மாரிச்சாமி ,உதவியாளர் தங்கம், ஊராட்சி செயலாளர்கள் தினேஷ், விமலா, மாது ,ஜெகன் உள்ளிட்ட திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர் .
No comments