குஜராத் விமான விபத்து..... ஒருவர் உயிருடன் மீட்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, June 12, 2025

குஜராத் விமான விபத்து..... ஒருவர் உயிருடன் மீட்பு

 


குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து 'ஏர் இந்தியா' நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 'ஏர் இந்தியா' விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர் அவரது பெயர் அஜய் குமார் ரமேஷ் என்றும், அவர் விமானத்தின் இருக்கை எண் 11-Aல் இருந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment