• Breaking News

    நீங்கள் தான் பெஸ்ட்...... பிரதமர் மோடியை புகழ்ந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

     


    வளர்ந்த நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 15 முதல் 17-ந்தேதி வரை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

    அதை ஏற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் கனனாஸ்கிஸ் சென்றார். அங்கு ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களை தனித்தனியாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பேசினார்.

    தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இத்தாலியும், இந்தியாவும் ஒரு மிகப்பெரிய நட்புறவால் இணைக்கப்பட்டு உள்ளது என மெலோனி பாராட்டினார். இதை வழிமொழிந்த பிரதமர் மோடி, நமது இரு நாட்டு மக்களின் நன்மைக்காக இந்த நட்பு மேலும் வலுவாக தொடரும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதனையடுத்து "நீங்கள்தான் பெஸ்ட், உங்களைப் போல மாற முயற்சி செய்கிறேன் என்று ஜார்ஜியா மெலோனி கூறினார். 'ஜி-7' மாநாட்டின்போது மகிழ்ச்சி பொங்க பிரதமர் மோடியை பாராட்டிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    No comments