புதிய தார் சாலை அமைக்கும் பணியினை சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புழுதிவாக்கம் 186 வது வார்டு முருகப்பா நகர் மெயின் ரோடு அண்ணா நகர் மெயின் ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் WIRTGEN எந்திரத்தின் மூலம் பழைய தார் சாலை முழுவதும் சுரண்டப்பட்டு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி 14வது மண்டல குழு தலைவர் எஸ். வி .ரவிச்சந்திரன் உதவி ஆணையர் முரளி 186 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ.கே .மணிகண்டன் 185 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா தேவி திவாகர் ,188 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் ,மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ,கழக நிர்வாகிகள், மக்கள் நலச் சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments