கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்..... 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பாட்டிகள்.....
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்த செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
பவித்ரா தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தனது இரு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர், பள்ளப்பட்டியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 17ம் தேதி பவித்ரா தனது இரு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த நபருடன் வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
மகள் வீட்டை விட்டு சென்ற செய்தி தெரிந்ததும், பாட்டி செல்லம்மாள் மற்றும் தாய் காளீஸ்வரி அவமானத்தில், கடும் மன அழுத்தத்துடன் இருந்தனர். “உங்கள் மகள் ஓடிப் போனாரா?” என அதே பகுதியை சேர்ந்த சிலர் கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவரும் ஆசையாக வளர்த்த வளர்த்த சிறுமிகள் லித்திக்ஷா, தீப்தியை கொன்று, பின்னர் வீட்டில் உள்ள ஃபேனில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
சம்பவம் குறித்து தெரிந்த அக்கம்பக்கத்தினர், இடையகோட்டை காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments