இன்றைய ராசிபலன் 07-07-2025
மேஷம் ராசிபலன்
இந்த நாள் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தொழில் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் கலையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை விஷயங்களை வீட்டிற்குக் கொண்டு வருவதால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் போதுமான நேரத்தைச் செலவிட உங்களால் முடியாமல் போகலாம், உங்களது சகாக்களினால் உண்டாகும் அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் நீங்கள் சொல்லும் "இல்லை" என்ற சொல்லை உறுதியாகச் சொல்ல வேண்டும்.
ரிஷபம் ராசிபலன்
உங்களுக்காக நிறைய நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த நல்லவிஷயங்களிலிருந்துநன்மைகளைப் பெற, நீங்கள் உங்கள் முயற்சிகளை இரண்டு மடங்கு செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் மூளையில் எந்த கெட்ட எண்ணங்களுக்கும் இடம்கொடுக்காமல்இருக்க முயற்சி செய்யுங்கள். அந்த மனப்பான்மையை நீங்கள் கைவிட வேண்டும். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்பது கடினம், ஆனால் நீங்கள் மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது சிலருக்கு நன்மைகளை உண்டாக்கலாம். உங்கள் ஆணவத்தை விட, நீங்கள் அவர்களை அதிகம் மதிக்கிறீர்கள் என்பதைஅவர்களுக்குப்புரியவையுங்கள்.உங்கள் அன்புக்குரியவர்களின்உணர்ச்சிப்பூர்வமானதேவைகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைப்பதை விட அவர்களுக்கு இது அவசியமாக இருக்கும்.
மிதுனம் ராசிபலன்
படைப்பாற்றல் இன்றுசிறப்பாகச்செயல்படுகிறது. இதை நீங்கள் இன்று அல்லது இந்த வாரத்திற்குள் சிறிது நேரம் செலவிட்டு அதை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். இதற்காக மற்றவர்களிடம் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, அமைதியினை நிலைநாட்டுவது தான் உங்கள் முன்னுரிமையாக முதலிடத்தில் உள்ளது. ஒரு சில புத்திசாலித்தனமான நபர்கள் உங்களை அவர்களது பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இன்று, அவர்கள் உண்மையிலேயே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு சற்று எரிச்சலூட்டினால், நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வார இறுதி நாட்களானது மகிழ்ச்சியாக பொழுதைக் களிக்கும் பிரதான நோக்கத்திற்காகவே உள்ளன. ஏதாவது செய்யுங்கள். கிடப்பிலுள்ள வேலைகளைச் சமாளிக்க சிறந்த செயல் திட்டத்துடன் வாருங்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்களுக்குத் தோன்றும் உள்ளுணர்வுகள் அனைத்தும் உறுதியாக நடந்து வருகிறது. உங்கள் மனதில் தோன்றும் சில விஷயங்கள், இதை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கலாம். அவற்றை, கொஞ்சமாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் மனக்கசப்பு கொண்ட ஒரு நபரிடம் உள்ள குறைகளைச் சரி செய்யுங்கள். அந்த குறைகள் குறித்து நீங்கள் சிந்தித்து, அவரிடம் உண்மை இல்லை என்று தெரிந்து கொண்டால், அதை மேம்படுத்த அவருக்கு உதவுங்கள்!
கன்னி ராசிபலன்
கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்பான மற்றும் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இந்த நாளில், உங்களுக்காக வரிசையாகக் காத்திருக்கும் இன்பமான செயல்களை நிதானமாக அனுபவியுங்கள். மோசமான எண்ணங்களை விட்டுவிட்டு, ஆனந்தத்தைச் சிறந்த முறையில் அனுபவியுங்கள்.
துலாம் ராசிபலன்
இன்றைய நாளில் தாராள மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். முகத்தில் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு, முரட்டுத்தனமாகவும், இரக்கமற்ற மனிதராகவும் இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றலுடன் இருப்பது இந்த நாள் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற உங்களுக்கு உதவும். இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, பயம் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பொருளாதார நிலைமை நிலையாக இருக்கிறது. ஆகையால், எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
எல்லா வேலைகளும் உண்மையான முடிவுகளைப் பகுப்பாய்வு செய்ய உங்களுக்கு உதவாது. எனவே, அமைதியாக உட்கார்ந்து, இன்று உங்கள் வேலைகளை மறு ஆய்வு செய்யுங்கள். தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். மோசமான அனுபவத்திலிருந்து, கிடைக்கும் நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை செய்த வேலைகளில், இது போன்ற விஷயங்களைச் செய்திருக்க மாட்டீர்கள். வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் கவனத்தைத் திசை திருப்பலாம். அந்த வகையில் வீட்டில் உங்கள் வாழ்க்கை எவ்வாறு நகர்கிறது என்பதற்கான உண்மையான உணர்வை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தனுசு ராசிபலன்
உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவற்றை நீங்கள் சமாளித்து விட்டீர்கள். ஆனால், இனிமேல், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், உங்கள் பிரச்சனைக்கு விரைவில் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருங்கள். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் எப்போதும்உங்களுக்குப்பக்கபலமாக இருப்பார்கள். ஓய்வெடுங்கள். உங்கள் உடலையும், மனதையும் ஓய்வாக வைத்திருங்கள். நீங்கள் நீண்ட காலமாக விரும்பியபடி எளிமையாக நடந்து கொள்ளுங்கள்.
மகரம் ராசிபலன்
உங்களது வாழ்க்கையில் இடம் பெற்றுள்ளவர்களின் மதிப்பை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். இன்று, உங்களது அன்புக்குரியவரை ஆச்சரியப்படுத்துங்கள். இது அவர்களின் அந்த நாளை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவுவதற்கு உங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளிக்கும். மேலும், அவர்கள் தங்களது மிகவும் கவலைக்குரிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். ஏனென்றால், ஒருவேளை, நீங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பதால் கூட, இருந்திருக்கலாம். உங்களது வார்த்தைகள் அத்தகையவர்களை ஆறுதலளித்து, குணப்படுத்தும்.
கும்பம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.
மீனம் ராசிபலன்
மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை கையாள்வதில் உங்களுக்குள்ள திறமைகள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இன்றைய தினத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம், அந்த மன அழுத்தம் உங்களை முழுமையாக ஆட்கொண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை பாராட்டும் போது, பரந்த மனதுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று, நீங்கள் செய்யும் செயல்கள், ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
No comments