பாகிஸ்தானில் புதிய கட்சியை தொடங்கிய இம்ரான்கான் முன்னாள் மனைவி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அக்கட்சினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் தற்போது பாகிஸ்தான் குடியரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை ஏற்கவில்லை. ஒரு நபருக்காக ஒரு கட்சியில் சேர்ந்தேன். ஆனால் இன்று நான் எனது சொந்த கருத்துகளில் நிற்கிறேன். பாகிஸ்தான் குடியரசு கட்சி சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும். இது வெறும் கட்சி கிடையாது. பாகிஸ்தானின் அரசியலை உண்மையாக, பொது சேவையாக மாற்றுவது நோக்கம்.
அனைத்து பெரிய அரசியல்வாதிகளை மாற்ற நான் வந்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நான் கண்ட பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. அதை இனி ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
No comments