• Breaking News

    பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்

     


    தென்னிந்திய சினிமாவின் ராணி என அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று காலை உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 87 வயது ஆகிறது. இவர் நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி பிறமொழி திரைப்படங்களிலும் நடிகை சரோஜாதேவி கலக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று நடிகை சரோஜாதேவி மரணம் அடைந்துள்ளது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சரோஜாதேவி மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments