• Breaking News

    நெல்லை: போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு

     


    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களை பாதுகாப்பதற்கும் அவர்கள் களத்தில் இறங்கி செயல்பட்டனர்.அப்போது, அப்போது, ஒரு வீட்டின் உள்ளே இருந்த காவல்துறையினரை நோக்கி, 17 வயது சிறுவன் ஒருவன் அரிவாளால் வீட்டின் கதவைத் தாக்கியுள்ளான். 

    நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் அவனது வயிற்றுப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக அவரை காப்பாற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.சிறுவனின் உயிருக்கு தற்போது எந்தவொரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு, தாக்குதல், பொது அமைதிக்கேடான நடவடிக்கைகள் போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பகுதியிலும் காவல்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments