மத நம்பிக்கையின் வெளிப்பாடாக, மொபைல் விற்பனையாளரொருவர் ராஜஸ்தானின் பிரபலமான ஸ்ரீ சன்வாலியா சேத் கோவிலுக்கு 250 கிராம் வெள்ளியில் ஆன ஐபோனை பரிசளித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இந்தூரைச் சேர்ந்த அந்த வணிகர்,கடந்த ஜூலை 16ஆம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் கோவிலுக்கு சென்று எந்தவித சபதமும் இல்லாமல், வெள்ளியால் செய்யப்பட்ட ஐபோனை பக்தி உணர்வோடு பரிசளித்தார்.
அந்த வீடியோ இணையத்தில் வெளியானதும், நெட்டிசன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தருணம் பதிவுசெய்யப்பட்ட வீடியோவிலும், பக்தரின் முகத்தில் தெய்வீக பக்தி பளிச்சென்று தெரிகிறது.இதுபற்றி பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் “ஜெய் சன்வாலியா சேத்” என உற்சாகமாக கூறியிருக்க, மற்றொருவர் சிந்தனையோடு, “அதுல ஒரு சிம் கார்டும் போட்டிருந்தா, என் மகிழ்ச்சியும் துக்கமும் உங்களோடு பகிர்ந்திருக்கலாம்” என எழுதியுள்ளார்.
இத்தகைய சம்பவம், நவீன உலகத்தில் பக்தியின் புதிய கோணத்தைக் காட்டுகிறது என்றும், பலரின் பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றுவருகிறது.
No comments:
Post a Comment