• Breaking News

    நெல்லை: ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்

     


    நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று  மாலை, நெல்லை மாவட்டம் கே.டிசி .நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை அருகே, கவினை ஒருவர் கூச்சலிட்டு அழைத்து, கத்தியை பயன்படுத்தி பலத்த காயங்களுடன் வெட்டி கொலை செய்தார். 

    சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில்,  சுர்ஜித் என்ற இளைஞரே இந்த கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது.முதற்கட்ட விசாரணையில், கவின் மற்றும் சுர்ஜித் குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பான மனமுடைவே இந்த கொலையை தூண்டியதாக தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித், தனது சகோதரி மற்றும் கவின் ஒரே கல்லூரியில் பயின்று பழகி வந்த நிலையில், அந்த நட்பு நெருக்கம் சுர்ஜித்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதனால் வெறிச்செயலாக கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக, பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித் மீது கொலை மற்றும் வன்கொடுமை  தொடர்பான நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    மேலும், கவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சுர்ஜித்தின் பெற்றோரும் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், நெல்லை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி, விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    No comments