• Breaking News

    ராமநாதபுரம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதல்..... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி......

     


    மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.


    இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் 28, ராமநாதபுரம் ஜமுனா 55, ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்த 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

    No comments