ரஜினியின் "கூலி" திரைப்பட டிரெய்லர் வெளியானது - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 2, 2025

ரஜினியின் "கூலி" திரைப்பட டிரெய்லர் வெளியானது

 


நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

'கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here