அரசியல் அடிப்படை தகுதியே ரெண்டு பொண்டாட்டி...... கஸ்தூரி போட்ட ட்வீட்டால் பரபரப்பு...... - MAKKAL NERAM

Breaking

Saturday, August 30, 2025

அரசியல் அடிப்படை தகுதியே ரெண்டு பொண்டாட்டி...... கஸ்தூரி போட்ட ட்வீட்டால் பரபரப்பு......

 


பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ், தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன் தனது 50வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


இந்த தகவலால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுசிலா, ராமதாஸ் மருத்துவராக பணியாற்றிய காலத்தில் நர்ஸாக பணியாற்றியதாக கூறப்படுவதுடன், அந்தச் சந்திப்பு காதலாக மாறி பின்னர் திருமணமாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. தற்போது சுசிலாவுக்கு 66 வயது, ராமதாஸுக்கு 86 வயது ஆகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


ராமதாஸ் – இரண்டாவது மனைவியுடன் 50 ஆண்டு நட்பு: சமூக வலைதளங்களில் விமர்சனம்


இரண்டாவது மனைவி மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இதுவரை வெளிப்படையாக பகிரப்படாத நிலையில், தற்போது வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன. “ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் எப்போது திருமணம் செய்தார்?”,


“அப்போது சுசிலாவுக்கு வயது என்ன?”, “அன்புமணி ராமதாஸ் அந்தநேரம் எந்த வயதில் இருந்தார்?” போன்ற சந்தேகங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் இந்த புகைப்படங்கள் வெளியானது ஒரு நோக்கத்துடன் மட்டுமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கஸ்தூரியின் சாடும் பதிவு – ‘ரெண்டு பொண்டாட்டி’ அரசியலா?


இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில், “தமிழ்நாட்டுல அரசியல் அடிப்படை தகுதியே ரெண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றது தான் போல… இங்க எத்தனை பிள்ளைகளோ? கட்சியை யாரு யாரு எத்தனை கூறு போட போறாங்களோ?” என்று எழுதி இருந்தார்.


இதனால், ராமதாஸின் குடும்ப விவகாரம் மீண்டும் அரசியல் கலவையுடன் கூடிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கிடையில், ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர் புகைப்படம் ஏ.ஐ. உருவாக்கப்பட்டது என்றும், இது பொய்யானது என்றும் மறுப்புக் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment